கொரோனாவுக்கு பலியான அமமுக பிரபலம்: தொண்டர்கள் அதிர்ச்சி!

 

டிடிவி தினகரனின் அமமுக கட்சியின் பொருளாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்தது 

இதனை அடுத்து அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி செய்து வந்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் அவர்கள் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது இதனை அடுத்து அமமுக கட்சி தொண்டர்கள் பெரும் கவலையில் உள்ளனர் 

அமமுக கட்சியின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்த வெற்றிவேல் மரணம் அக்கட்சியினருக்கு குறிப்பாக டிடிவி தினகரனுக்கு பேரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து டிடிவி தினகரன் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

From around the web