குஷ்புவை அடுத்து பாஜகவில் சேரும் பிரபலங்கள்: பெரிதாகிக் கொண்டே போகும் பட்டியல்

 

காங்கிரஸ் கட்சியில் ஒருசில ஆண்டுகள் இருந்த நடிகை குஷ்பு திடீரென நேற்று பாஜகவில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து தற்போது திரையுலகில் பாஜகவில் சேர ஒரு பெரிய பட்டியலே தயாராக இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஏற்கனவே நடிகர் விஷால் பாஜகவில் சேர்வதற்காக பேச்சுவார்த்தையை முடித்து விட்டார் என்றும் விரைவில் அவர் பாஜகவில் இணைவார் என்றும் கூறப்பட்டது. அதேபோல் சமீபத்தில் இரண்டாம் குத்து என்ற படத்தை இயக்கிய சந்தோஷ் குமார் தனது படம் ரிலீஸாவதில் சிக்கல் இருப்பதால் அவரும் பாஜகவில் சேர இருப்பதாக கூறப்படுகிறது

அதுமட்டுமின்றி தளபதி விஜய்யின் தந்தையும் பாஜகவில் சேரப்போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றது. இந்த செய்திக்கு எஸ் ஏ சந்திரசேகர் மறுப்பு தெரிவித்தார் என்றாலும் இதற்கு முன்னர் பாஜகவில் சேர்ந்தவ குஷ்பு உள்பட அனைவரும் இதேபோல் மறுப்புத் தெரிவித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 

மேலும் திரையுலகிலிருந்து பலர் பாஜகவை நோக்கி படையெடுத்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web