திருவள்ளூர் மக்களே கொண்டாடுங்கள்! நீங்கள் தான் தமிழகத்தில் "முதலிடம்"!

தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் பள்ளிப்பட்டு பகுதியில் ஐந்து சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது!
 
thiruvallur

தற்போது தமிழகத்தில் கோடை காலம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் வெப்பநிலையானது பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் இன்னும் வெப்பநிலையானது இயல்பை விட அதிகமாகவே காணப்படுகிறது.  தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு வெப்பநிலையானது இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்றும் கூறியுள்ளது.  தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கோடை மழை கொட்டித் தீர்க்கிறது, அதுவும் குறிப்பாக கன்னியாகுமரி பகுதியில் 20 நாட்களாக கோடை மழை கொட்டி தீர்ந்து அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.rain

 தற்போது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 5 சென்டிமீட்டர் பதிவாகியுள்ளது. இது திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பள்ளிப்பட்டு பகுதியில் ஐந்து சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதை தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரூர் பகுதியில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது .

மேலும் வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தத்தில் 3 சென்டி மீட்டர் மழையும், மதுரையில் உள்ள கள்ளிக்குடி மற்றும் கோவையில் உள்ள சின்னக்கல்லார் பகுதியில் இரண்டு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மேலும் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் பகுதியிலும் இரண்டு சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனால் இந்த கோடை காலத்திலும் கூட தமிழகத்தில் பல பகுதிகளில் கோடை மழை பெய்து வரும் மக்களுக்கு இதமான வானிலையே உருவாக்குகிறது. மேலும் தற்போது நம் தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் நிறைவு பெற்றதால் மக்கள் ஓரளவு மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

From around the web