மாணவர்களே கொண்டாடுங்கள்! பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு ரத்து!!!

மத்திய பிரதேசத்தில் 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது!
 
students

 நம் தமிழகத்தில் எப்பொழுதும் ஏப்ரல் மாதத்திற்குள் பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நடைபெற்று முடிந்து விடும். ஆனால் நம் தமிழகத்தில் இன்றளவும் கூட பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நடை பெறவில்லை என்றே கூறலாம். காரணம் என்னவெனில் முன்னதாக அறிவிக்கப்பட்ட சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியும் அதனால் தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி தள்ளிப்போனது. அதன் பின்னர் தமிழகத்தில் எதிர்பாராதவிதமாக கொரோனா ஆதிக்கம் அதிகரித்தது.students

இதனால் தமிழகத்தில் இன்று அளவுகூட பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நடை பெறவில்லை என்றே கூறலாம். ஆனால் தமிழகத்தில் தற்போது புதிதாக ஆட்சியில் உள்ளது திமுக. திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளார். அவர் இதுகுறித்து சிலவற்றை கூறினார், அதன்படி தமிழகத்தில் நிச்சயமாக பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நடைபெறும் என்றும், தமிழகத்தில் ஆல் பாஸ் கிடையாது வாய்ப்பே இல்லை என்றும் அவர் கூறினார்.

மேலும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும்  பொதுத் தேர்வு நடை பெறவில்லை என்றே கூறலாம்.  தற்போது ஒரு சில மாநிலங்கள் இதற்காக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதன் வரிசையில் தற்போது மத்திய பிரதேசத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் மத்திய பிரதேச மாநிலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக அந்த மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். மேலும் கொரோனா  காரணமாக 12-ஆம் வகுப்பு தேர்வுகள் இரத்து செய்வதாக மத்திய பிரதேச முதல்வர் இவ்வாறு அறிக்கையினை வெளியிட்டுள்ளார். மேலும் நம் தமிழகத்திலும் காத்திருப்பில் காத்துள்ளனர் நம் தமிழக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள்.

From around the web