பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து சிபிஎஸ்இ!மத்திய அரசு அதிரடி!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்தது மத்திய அரசு!மத்திய அரசின் அதிரடி முடிவால் மாணவர்கள் மகிழ்ச்சி!
 
பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து சிபிஎஸ்இ!மத்திய அரசு அதிரடி!

மக்கள் மத்தியில் ஆட்கொல்லி நோயாக தற்போது வலம் வந்து கொண்டுள்ளது  கொரோனாநோய். கொரோனா முதன் முதலில் நட்பு நாடான சீனாவில் கண்டறியப்பட்டது அதன் பின்னர் உலகம் முழுவதும் இந்நோயின் தாக்கம் இருந்தது.  இந்திய அரசு கடந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா நோயை கட்டுப்பாட்டில் கொண்டுவந்து இருப்பினும் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு திட்டங்களையும் விதிகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்து உள்ளன. மேலும்ஒவ்வொரு மாநிலத்தின் சார்பிலும் மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

government

அதன்படி தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதன்படி வெளியே செல்லும்போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.மேலும் மத சார் ஊர்வலங்கள் கோவில் திருவிழாக்கள் போன்றவற்றை ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நடைபெற அனுமதி மறுத்துள்ளது. இதற்காக பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன.

இருப்பினும் தமிழக அரசானது தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.  மேலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகின. இந்நிலையில் தற்போது பத்தாம் வகுப்புக்கான சிபிஎஸ்சி தேர்வு ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் கொரோனா காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மே 4ஆம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வுகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  எனினும் பத்தாம் வகுப்புக்கான மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மத்திய அரசு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தற்போது பத்தாம் வகுப்புக்கான சிபிஎஸ்சி பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது உறுதியாகிஉள்ளது.

From around the web