சிபிஎஸ்இ 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி தொடங்கும் தேதி அறிவிப்பு!

 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒரு ஆண்டாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பள்ளிகள் திறக்கும் பணி தொடங்கியது. ஏற்கனவே பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி முதல் 9, 11ஆம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது.

மேலும் 6 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டு விட்டது என்பதும் கல்லூரி மாணவர்கள் தற்போது வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

cbse

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி சிபிஎஸ்சி 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்கலாம் என்றும் முதல் கட்டமாக சிபிஎஸ்இ 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிகளுக்கு வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாநில அரசின் அனுமதியோடு நடப்பு கல்வி ஆண்டில் முன்கூட்டியே பள்ளிகளை திறக்க சிபிஎஸ்சி அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரும் 15ம் தேதி முதல் சென்னை மின்சார ரயிலில் அனைத்து ரயில்களிலும் மாணவர்கள் பயணிக்க அனுமதி அளிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

From around the web