அரக்கோணத்தில் இரட்டைக் கொலை! வழக்கை சிபிஐ! விசாரிக்க வேண்டும் விசிக தலைவர்!

அரக்கோணத்தில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்!
 
அரக்கோணத்தில் இரட்டைக் கொலை! வழக்கை சிபிஐ! விசாரிக்க வேண்டும் விசிக தலைவர்!

சட்டமன்றத்தேர்தல் தமிழகத்தில் கூறியிருந்தபடி ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் வாக்காளர் அனைவரும் வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்தனர். மேலும் தமிழகத்தில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை 12 மணி நேரங்களாக நடைபெற்றது. தேர்தலில் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் அசம்பாவிதங்கள் நடைபெற்றன. மேலும் கோவில்பட்டி பகுதியில் அதிமுக பிரமுகர் ஒருவரின் இருசக்கர வாகனம் எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

thirumavalavan

மேலும் இதை தொடர்ந்து ஒரு சில பகுதியில் கொலை ஏற்பட்டதுசம்பவமானது மிகவும் அதிர்ச்சி அளித்துள்ளது. அதன்படி அரக்கோணத்தில் தேர்தல் தினத்தன்று இளைஞர்கள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதற்கு பல தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். தற்போது  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மதுரையில் பேட்டி அளித்துள்ளார். அதன்படி அரக்கோணத்தில் நடைபெற்ற இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் ரெம்டெசிவிர் மருந்துக்கான உள்ளூர் தட்டுப்பாட்டை அரசு நிவர்த்தி செய்ய வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.இதற்கு முன்பே அரக்கோணத்தில் நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web