சிமெண்ட் விலை ஏற்றம் சிபிஐ  தான் விசாரிக்க வேண்டும்!"ஹை கோர்ட் ஆர்டர்"

சிமெண்ட் விலை ஏற்றம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
 
சிமெண்ட் விலை ஏற்றம் சிபிஐ தான் விசாரிக்க வேண்டும்!"ஹை கோர்ட் ஆர்டர்"

தற்போது உள்ள இளைஞர்கள் மத்தியில் எப்படியாவது உழைத்து சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் தற்போது இளைஞர்கள் முன்னர் போல் இல்லாமல் மிகவும் பொறுப்புடனும் உள்ளனர் என்பதும் அவ்வப்போது தெரிய வருகிறது. மேலும் இந்த வீட்டிற்கு கட்டுவதற்கு செங்கல், மண் மற்றும் சிமென்ட் போன்றவைகள் தேவைப்படுகின்றன. இம்மூன்றும் சேர்த்தால்தான் ஒரு வீட்டினை கட்டமுடியும். இத்தகைய சூழலில் பல பகுதிகளில் இவை அனைத்தும் விலை அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.highcourt

 இதனால் இளைஞர்களின் கனவும் கனவாகவே மறைவது வேதனை அளிக்கிறது. இதுகுறித்து தற்போது உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவினை சிபிஐக்கு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.அதன்படி சிமெண்ட் விலை ஏற்றம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி அதன் பின்னர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சிமெண்ட் விலை ஏற்றம் தொடர்பாக சென்னையை சேர்ந்த கிளாஸ் ஒன் ஒப்பந்தக்காரர்கள் நலச்சங்கம் வழக்கு தொடுத்து உள்ளதால் தற்போது உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

மேலும் சிமெண்ட் உற்பத்தியாளர்கள் கூட்டுச்சேர்ந்து செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கி விலையை உயர்த்து வதாக புகார் எழுந்துள்ள நிலையில் தற்போது சிபிஐ-க்கு மாற்றியது உயர்நீதிமன்றம். சிமெண்ட் விலை உயர்வு உற்பத்தியாளர்களின் கூட்டுசதி உள்ளது எனவும் மனுவில் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் சிமெண்ட் விலை உயர்வில் உற்பத்தியாளர்களின் கூட்டுசதி உள்ளதா? என்று சிபிஐ விசாரிக்க மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் குறித்து ஜூன் 3ல் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

From around the web