ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு-பிரதமருடன் ஆகஸ்ட் 23-ஆம் தேதி ஆலோசனை!!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பீகார் முதல்வர் பிரதமரிடம் வலியுறுத்தியதாக தகவல் அளித்தது
 
people calculation

தற்போது உலகில் மக்கள் தொகை அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது சீனா. மேலும் சீனாவை அடுத்து நம் தாய்த்திரு நாடான இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது மேலும் வரும் நாட்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்தியா முதல் இடத்திற்குப் போவது சாதாரணமான ஒன்றாக காணப்படும். நாளுக்கு நாள் மக்கள் தொகையின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. மேலும் இதனால் பல விளை நிலங்கள் பிளாட்டுகள் விற்கப்பட்டு அவர்கள் கட்டடங்களாகின்றன.nithish

இதனால் உணவு பற்றாக்குறையும் நிகழலாம் என்றும் கூறப்படுகிறது. இதன் மத்தியில் மக்கள் தொகையோடு மட்டுமில்லாமல் மக்களிடையே ஜாதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் அவ்வப்போது இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தற்போது பீகார் மாநில முதல்வர் சில வலியுறுத்தல்களை பிரதமரிடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

அந்தப்படி பீகார் மாநில முதல்வர் நிதி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துமாறு பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி தன்னை சந்திக்க பிரதமர் மோடி நேரம் ஒதுக்கி உள்ளதாகவும் பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் பேட்டியளித்துள்ளார். மேலும் பீகாரில் இருந்து பிரதிநிதிகள் குழு ஒன்றுடன் பிரதமரை ஆகஸ்ட் 23ம் தேதியில் சந்திக்க உள்ளதாகவும் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் தகவல் அளித்துள்ளார்.

From around the web