வட்டிக்கு வட்டி வசூலிக்க தடை கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

கொரோனா வைரஸ் பாதிப்பு காலத்தில் இஎம்ஐ கட்ட வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக வட்டிகட்டிக் கொள்ளலாம் என்றும் வங்கிகள் அறிவித்திருந்த நிலையில் வட்டிக்கு வட்டி வசூலிப்பது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டன

கொரோனா வைரஸ் பாதிப்பு காலத்தில் இஎம்ஐ கட்ட வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக வட்டிகட்டிக் கொள்ளலாம் என்றும் வங்கிகள் அறிவித்திருந்த நிலையில் வட்டிக்கு வட்டி வசூலிப்பது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டன

இந்த வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை செய்யப்பட்டு பரபரப்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது 

இன்றைய விசாரணையின்போது இஎம்ஐ வட்டிக்கு வட்டி வசூலிக்க தடை கோரிய வழக்கில் இஎம்ஐ காலத்தில் கடன் செலுத்த வங்கி கணக்குகளை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக் கூடாது என்றும் இடைக்கால உத்தரவு தொடரும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது 

மேலும் கடன் தள்ளுபடி தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் தீர்க்கமான முடிவை எடுக்க மத்திய அரசுக்கும் வங்கிகளுக்கும் கால அவகாசம் தருகிறோம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

From around the web