அணைக்கட்டு அதிமுக வேட்பாளர் வேலழகன் மீது வழக்கு பதிவு!

நாளைய தினம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தமிழகத்தில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கொண்டுசெல்லப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தேர்தல் வேலைப்பாடுகள் மிகவும் பரபரப்பான நிலையில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக உள்ளார் சத்யபிரதா சாகு உள்ளார். சத்யபிரதா சாகு சில மணிநேரங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு தகவல்களை வெளியிட்டார்.

இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன பரிசோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் பரிசோதனையில் ஈடுபடும்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்படும் நகைகளையும், பணத்தையும் பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வாகன பரிசோதனை நடைபெற்று வருகிறது. மேலும் வேலூர் மாவட்டத்தில் வாகனத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்பொழுது அணைக்கட்டு தொகுதி அதிமுக வேட்பாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வேலூரில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது 4 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் வேட்பாளர்கள் மீது வழக்கும் பதிவு செய்து, காரில் வைக்கப்பட்ட 4 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் வேட்பாளர்களின் படம் அடங்கிய பிரசுரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது அணைக்கட்டு அதிமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவாகி உள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.