பட்டியலின மக்களை காலில் விழவைத்து விவகாரம்-8 பேர் மீது வழக்கு!

பட்டியலின மக்களை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த விவகாரத்தில் 8 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது!
 
பட்டியலின மக்களை காலில் விழவைத்து விவகாரம்-8 பேர் மீது வழக்கு!

தற்போது தமிழகத்தில் இரு வார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளன. அதனால் பல்வேறு திருவிழாக்கள் பல்வேறு மதங்கள் போன்றவற்றிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அதிகமாக கூடுவதற்கும் தடை காரணம் என்னவெனில் கண்ணுக்கே தெரியாமல் மனிதனை நோய்க்கு தள்ளும்  கொரோனா தாக்கம் அதிகமாக காணப்படுவதால் இத்தகைய ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.தமிழகத்தில் ஆட்சியில் உள்ள புதிய அரசு மேலும் இதனை தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள திரு மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.police

அதன்படி நம் தமிழகத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் இரு வார காலத்திற்கு ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் இன்றைய தினத்தின் முதல் ஊரடங்கு ஆனது மிகவும் கட்டுப்பாடுடன் இருக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதனால் மக்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஊரடங்கு காலத்தில் ஒருசில பகுதிகளில் இன்னும் அநியாயங்கள் நடைபெறுகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பட்டியல் இன மக்களை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த விவகாரம் அனைவரையும் அதிர வைத்துள்ளது.

இதனால் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவில் பெயரில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் ஒட்டனந்தலில் பட்டியலின வகுப்பை சார்ந்த மூன்று பேரை மன்னிப்பு கேட்க வைத்ததாக ஊர் மக்கள் மீது புகார் எழுந்துள்ளது. மேலும் அவர்களை மீறி கோயில் விழா நடத்தியதால் பஞ்சாயத்து நடத்தி மன்னிப்பு கேட்க வைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அவர்களை காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்த ஊர் மக்களில் எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்துள்ளார்கள் போலீசார்.

From around the web