வாக்குப்பதிவு நிறைய பெற்ற பின்னும் பணப்பட்டுவாடா 10 பேர் மீது வழக்கு!

புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னரும் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தகவல் வெளியானது!
 
வாக்குப்பதிவு நிறைய பெற்ற பின்னும் பணப்பட்டுவாடா 10 பேர் மீது வழக்கு!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆனது ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.மேலும் மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வரிசையில் நின்று ஜனநாயக கடமை ஆற்றினார். மேலும் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் ஆனது தமிழகத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் புதுச்சேரியில் நடைபெற்றது.

vote

மேலும் புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகளில் உள்ளன இந்த 30 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று சீலமைக்கும் பணியும் நிறைவு பெற்றது. புதுச்சேரியில் உள்ள மொத்தம் 30 தொகுதிகளில் கூட்டணி வேட்பாளர்கள் பலரும் களமிறங்கி இருந்தனர்.  ஒரு சில பகுதிகளில் அசம்பாவிதங்கள் நடைபெற்றது. தற்போது வாக்கு பதிவானது நிறைய பெற்ற பின்னரும் பணப்பட்டுவாடா தொடர்பான தகவல் வெளியானது

  புதுச்சேரி மாநிலத்தில் உப்பளம் தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்த பின்னரும் பணப்பட்டுவாடா தொடர்கிறது. மேலும் நெல்லித்தோப்பு, உப்பளம் திருநள்ளாற்றில் பரிசுப் பொருட்களுக்கான டோக்கன் விநியோகமும் நடைபெறுகிறது. மேலும் இதுதொடர்பாக சுயேச்சை வேட்பாளரான முன்னாள் அமைச்சர் சிவா உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.

From around the web