10ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றால் கார் பரிசு: கல்வி அமைச்சர் அறிவிப்பு

 

10ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றால் பனம் மற்றும் பாராட்டுக்கள் கிடைக்கும் என்பது தெரிந்ததே ஆனால் ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சர் 10ஆம் மற்றும் 11ஆம், 12ம் வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஆல்டோ கார் பரிசு அளிக்கப்படும் என கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஜார்ஜப்ட் நாநுக கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹோதா இவ்வாறு கூறியது மட்டுமன்றி இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஆல்டோ காரை பரிசாக வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி இவரும் ஒரு மாணவர் என்பதும் இவர் தற்போது பதினோராம் வகுப்பு படித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இது குறித்து கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹோதா கூறுகையில் ’தேர்தல் சமயத்தில் நான் ஏற்கனவே இந்த வாக்குறுதியை கொடுத்து இருந்தேன். அந்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றியுள்ளேன். இந்த ஆண்டு மட்டுமின்றி அடுத்த ஆண்டும் 10, 12ஆம் வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கார் பரிசாக வழங்குவேன் என்று தெரிவித்துள்ளார் 

இவர் ஏற்கனவே தனது தொகுதியில் 10ஆம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு மோட்டார் பைக் பரிசாக வழங்கியுள்ளார் என்பதும் அது மட்டுமின்றி 75 சதவீத மதிப்பெண்களுக்கும் அதிகமான பெற்றவர்களுக்கு லேப்டாப் உள்ளிட்ட பல பரிசுகளை வழங்கி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இது போன்ற பெரிய பரிசுகள் அறிவித்தால் தான் மாணவர்கள் போட்டி போட்டுக் கொண்டு சிறப்பாக படிப்பார்கள் என்பதற்காகவே இவ்வாறு அறிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்

From around the web