சோழிங்கநல்லூர் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்த கேப்டன்!

சோழிங்கநல்லூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் முருகனை ஆதரித்து கேப்டன் விஜயகாந்த் தேர்தல் பரப்புரை!
 
சோழிங்கநல்லூர் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்த கேப்டன்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறஉள்ளது. தமிழகத்தில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திப்பதாக அதிமுக கட்சி அதனுடன் கூட்டணியாக பாஜக மற்றும் பாமக கட்சியில் வைத்துள்ளது. மேலும் அதிமுக பாஜகவிற்கு 20தொகுதிகளை வழங்கியது. இந்நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று அழைக்கப்படும் தேமுதிக கட்சி அதிமுக கூட்டணியில் இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் கூட்டணியில் இருந்து விலகியது என தேமுதிக தரப்பிலிருந்து தகவல்.

peramalatha

மேலும் அதிமுக கூட்டணியில் விலகிய சில நாட்களிலேயே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று அழைக்கப்படும் அமுமுக கட்சியின் கூட்டணியில் தேமுதிக இணைந்தது. அதற்காக தேமுதிகவிற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆனது 60 தொகுதிகளில் வழங்கியது. தேமுதிக சார்பில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட உள்ளார்.

மேலும் சோழிங்கநல்லூர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் முருகன் போட்டியிட உள்ளார் .மேலும் வேட்பாளர் முருகனை ஆதரித்து 5ஆவது நாளாக அக்கட்சியின் கேப்டன் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். மேலும் அவர் தொண்டர்களை பார்த்து இரு கரங்களால் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவரை கட்சி தொண்டர்கள் மிகுந்த ஆனந்தத்துடன் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

From around the web