முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்தார் கேப்டன் விஜயகாந்த்!

குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீட்டுக்கு திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார் கேப்டன் விஜயகாந்த்!
 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்தார் கேப்டன் விஜயகாந்த்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆனது ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்திருந்த படி நடைபெற்று முடிந்தது. மேலும் சட்டமன்ற தேர்தலில் அதிகமாக வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இந்த சட்டமன்ற தேர்தலில் பல கூட்டணி கட்சிகள் ந்திருந்தன. குறிப்பாக தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக கட்சி தன்னுடன் கூட்டணியாக மத்தியில் ஆளும் பாஜக மற்றும் பாமக கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தன. தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று அழைக்கப்படும் தேமுதிகவும் அதிமுக கூட்டணியில் இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதாக கூறப்பட்டது.

eps

மேலும் அவர்கள் இடையே தொகுதி ஒதுக்கீடு குறித்து நிலையில் தேமுதிக அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது. அதன்பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று அழைக்கப்படும் அமமுகவுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தல் தேமுதிக சந்தித்துள்ளது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி மீண்டும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டார்.

 அவர் சில தினங்களுக்கு முன்பாக குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது .இந்நிலையில் அவர் அறுவை சிகிச்சை முடிந்து விட்டு தற்போது வீட்டுக்கு திரும்பியுள்ளார். அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார் கேப்டன் விஜயகாந்த். மேலும் அவர் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்ப இறைவனை பிரார்த்திப்பதாகவும் கேப்டன் விஜயகாந்த் கூறியுள்ளார்.

From around the web