இனி இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முடியாது!

இந்தியாவில் இருந்து விமானங்கள் ஆஸ்திரேலியாவுக்கு வர மே 15ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது!
 
இனி இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முடியாது!

தற்போது இந்தியாவில் காட்டுத்தீயாக பரவி வருகிறது கொரோனா வைரஸ். கொரோனா கிருமியினால் இந்தியாவானது நாளுக்கு நாள் பாதிக்கப்படுவது வேதனை அளிக்கிறது. மேலும் இந்த நோயானது மனிதனின் கண்ணுக்கே தெரியாமல்  பாதிப்புக்கு உள்ளாக்குவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எனினும் கடந்த ஆண்டு இந்தியாவின் பெருமுயற்சியால் நோய் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது இந்தியாவில் நிலைமையே தலைகீழாக மாறியுள்ளது. காரணம் என்னவெனில் இந்நோயின் தாக்கம் அதிகரித்து தோடு மட்டுமின்றி இரண்டாவது அலையாகவும் வீரியம் உள்ளதாக காணப்பட்டுள்ளது.airport

இதனால் இந்திய மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர் மேலும் இந்தியாவுடன் பல நாடுகள் கொண்டிருந்த விமானப் போக்குவரத்து சேவையும் சில தினங்களாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பாக நியூஸிலாந்து இந்தியாவுடன் உள்ள விமான போக்குவரத்து சேவையை சில தினங்களுக்கு ரத்து செய்துள்ளது. மேலும் அதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பாக இந்தியாவில் கொரோனா அதிகரிப்பால் இந்தியாவுடன் உள்ள விமான சேவையை சில காலங்களுக்கு தடைவிதித்துள்ளது.

அதனை தொடர்ந்து தற்போது இந்தியாவின் உறவு நாடான ஆஸ்திரேலியாவும் இந்தியாவுடன் உள்ள விமான சேவையை சில தினங்களுக்கு தடைவிதித்துள்ளது. அதன்படி இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு விமானங்கள் வர மே 15ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தீவிரம் அடைந்துள்ளதால் மே 15 வரை இந்திய விமானங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. மேலும் இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு விதித்த தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

From around the web