இந்த ஆண்டு வழங்க முடியாது: மத்திய அரசு கைவிரிப்பால் தமிழக மாணவர்கள் அதிர்ச்சி!

 

மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 

மருத்துவ படிப்புக்காக அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் தமிழக ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது 
இந்த மனு மீதான விசாரணை சமீபத்தில் நடந்த போது தமிழக ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்த முடியுமா என மத்திய அரசிடம் கேட்டு பதில் சொல்ல வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது

இந்த உத்தரவுக்கு தற்போது மத்திய அரசு திட்டவட்டமாக உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. அதில் தமிழக ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 50 சதவீத ஒதுக்கீடு வழங்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழக ஓபிசி மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

From around the web