காங்கிரஸ் சொல்வதை ஏற்க முடியாது, கூட்டணி வேறு கொள்கை வேறு: திமுக

 

காங்கிரஸ் கூறும் அனைத்தையும் ஏற்க முடியாது என்றும் கூட்டணி கட்சியாக இருந்தாலும் இரு கட்சிகளுக்கும் கொள்கைகள் வேறு வேறு என்றும் திமுக தரப்பில் இருந்து கூறப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி மற்றும் திமுக-காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்ற சந்தேகம் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் அதிக தொகுதிகளை எதிர்பார்ப்பதாகவும் ஆனால் 200 தொகுதிகளில் திமுக போட்டியிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்படலாம் என கூறப்படுகிறது.  

ks azhagiri

இந்த நிலையில் பேரறிவாளன் உள்பட ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்வதை ஏற்க முடியாது என்றும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை அரசியல் கட்சிகள் விடுவிக்க சொல்வது ஏற்புடையதல்ல என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி சற்றுமுன் அறிக்கை வெளியிட்டிருந்தனர். ஆனால் அதே சமயத்தில் ஏழு பேரை செய்தால் எதிர்க்க மாட்டோம் என்று ராகுல்காந்தி  கூறியிருந்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார் 

இதுகுறித்து திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி கருத்து கூறுகையில் 7 பேரை விடுவிக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு என்றும், காங்கிரஸ் சொல்லும் அனைத்தையும் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார் 

மேலும் கூட்டணி வேறு கொள்கை வேறு என்றும் கூட்டணிக்காக கொள்கையை விட்டுக் திமுக விட்டுக்கொடுக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து திமுக காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

From around the web