ஆட்டோவில் சென்று வாக்கு சேகரித்த வேட்பாளர்வெற்றி அழகன்!

வில்லிவாக்கம் திமுக வேட்பாளர் ஆட்டோவில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்!
 

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளன. தமிழகத்தில் மிகவும் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள திமுக கட்சியானது தன்னுடன் கூட்டணியாக கம்யூனிஸ்ட் கட்சியையும் காங்கிரஸ் கட்சியையும் மதிமுக மற்றும் விசிக கட்சியும் வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார்.

stalin

 மேலும் மு க ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். மேலும் காட்பாடி தொகுதியில் துரைமுருகன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். மேலும் சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக களமிறங்கும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் தனது கட்சி மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.திமுக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் வேட்பாளராக வெற்றி அழகன் அறிவிக்கப்பட்டார். அப்பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். மேலும் திமுக தேர்தல் அறிக்கையை உள்ள துண்டு பிரசுரங்களை மக்களிடம் கொடுத்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும்  ஆட்டோவில்  கிழக்கு வானவீதி மேற்கு வானவீதி போன்ற பகுதிகளில் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

From around the web