இனவெறிக்கு எதிரான போராட்டம்.. போராட்டத்தில் பங்கேற்ற கனடா பிரதமர்!!

அமெரிக்காவில் சமீபத்தில் கருப்பு இனத்தவர் ஒருவரை கொன்ற சம்பவம் அரங்கேறியது, அந்த சம்பவத்தால் உயிர் இழந்த கருப்பினத்தவருக்கு நிகழ்ந்த கொடுமைக்கு நீதி கேட்டு அமெரிக்காவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வெள்ளை மாளிகையில் மக்கள் போராட்டத்திற்கு நீதி கிடைக்காத நிலையில், மே 31 ஆம் தேதி வெள்ளை மாளிகை முன்பு கருப்பின மக்கள் பலரும் போராட்டத்தினைத் துவக்கினர். இந்தநிலையில் போராட்டக்காரர்கள் போராட்டத்தினை கைவிடவில்லை எனில் நான் ராணுவத்தைக்கூட பயன்படுத்துவேன் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தபோதும் மக்கள் தொடர்ந்து
 
இனவெறிக்கு எதிரான போராட்டம்.. போராட்டத்தில் பங்கேற்ற கனடா பிரதமர்!!

அமெரிக்காவில் சமீபத்தில் கருப்பு இனத்தவர் ஒருவரை கொன்ற சம்பவம் அரங்கேறியது, அந்த சம்பவத்தால் உயிர் இழந்த கருப்பினத்தவருக்கு நிகழ்ந்த கொடுமைக்கு நீதி கேட்டு அமெரிக்காவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

 வெள்ளை மாளிகையில் மக்கள் போராட்டத்திற்கு நீதி கிடைக்காத நிலையில், மே 31 ஆம் தேதி வெள்ளை மாளிகை முன்பு கருப்பின மக்கள் பலரும் போராட்டத்தினைத் துவக்கினர். இந்தநிலையில் போராட்டக்காரர்கள் போராட்டத்தினை கைவிடவில்லை எனில் நான் ராணுவத்தைக்கூட பயன்படுத்துவேன் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தபோதும் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இனவெறிக்கு எதிரான போராட்டம்.. போராட்டத்தில் பங்கேற்ற கனடா பிரதமர்!!

இந்தநிலையில் பிளாயிட்டுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற போராட்டமானது அமெரிக்காவில் மட்டுமின்றி, மற்ற நாடுகளிலும் நடைபெற்று வருகின்றது. 

அந்தவகையில் கனடாவின் ஒட்டாவாவில் நடைபெற்ற போராட்டத்தில் கனடப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார். மேலும் பேரணியிலும் அவர் நடந்து வந்தார். மாஸ்க் அணிந்திருந்ததில் முதலில் இவரை அடையாளம் காணாத மக்கள் அடையாளம் கண்டதும் ஷாக் ஆகிப் போயினர்.

மேலும் ஜார்ஜ் பிளாய்ட் இறப்பிற்கு போராட்டக்காரர்களுடன் இணைந்து ஜஸ்டின் ட்ரூடோ 9 நிமிடங்கள் முழங்காலிட்டு மவுன அஞ்சலி செலுத்தினார். ஜஸ்டின் ட்ரூடோ போராட்டக்காரர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட புகைப்படங்கள் தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

From around the web