பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் இப்படி செய்யலாமா?

எம்பி எம்எல்ஏக்கள் பதவி காலம் முடிந்த பின்னர் அரசு அலுவலகங்களை காலி செய்ய வேண்டும்
 
house

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது.  நம் தமிழகத்தில் தற்போது முதல்வராக உள்ளார் முகஸ்டாலின் மேலும் இதற்கு முன்பு வரை அதாவது 10 ஆண்டுகளாக தமிழகத்தில் இரட்டை இலை ஆட்சி  நடைபெற்றது. அதன்படி தமிழகத்தில் பத்தாண்டுகளாக அதிமுகவின் ஆட்சி காணப்பட்டது மேலும் இந்த சட்டமன்ற தேர்தலில் தற்போது அதிமுக வானது எதிர்க்கட்சியாக வந்துள்ளது .இந்நிலையில் தற்போது ஆட்சி முடிந்தவுடன் பலரும் அவர்களது அறைகளை காலி செய்யாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியாகிறது. இதுகுறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது அந்தப்படி பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் இப்படி செய்யலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் தங்களின் பதவி காலம் முடிந்த பின்னர் அவர்கள் தாங்களாகவே அரசு அலுவலர்களை காலி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.

மேலும் மதுரை முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை காலி செய்ய உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை மேலும் வாடகை பாக்கி இருந்தால் மாநகராட்சி அதிகாரிகளிடம் முழுமையாக வசூல் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு விசாரணையின் போது இந்த வழக்கு தள்ளுபடி செய்வதாக கூறப்படுகிறது.

From around the web