தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்தலாமா? கருத்து கேட்க முடிவு!

பிளஸ் டூ தேர்வுகள் குறித்து இரண்டு நாட்களில் முடிவு வெளியாகும் என்று தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்!
 
exam

நம் தமிழகத்தில் எப்போதும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு   ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவுபெறும். ஆனால் தமிழகத்தில் தற்போது ஜூன் மாதமே உள்ள நிலையில் தமிழகத்தில் பணிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடை பெறவில்லை என்றே கூறலாம். இந்தியாவிலும் பல மாநிலங்களில் இன்றளவும் கூட பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த வில்லை என்று கூறலாம். இது குறித்து தற்போது தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி இடம் சில தினங்களுக்கு முன்பாக கேள்வி எழுப்பப்பட்டது.anbil mahesh

அவர் இதற்கு சில பதில்களை கூறியிருந்தார். அந்த பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கட்டாயமாக தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என்றும் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் முந்தைய அரசு செய்த அனைவரும் தேர்ச்சி என்ற ஆல் பாஸ் திட்டத்தை நிச்சயம் அமல்படுத்த படாது என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் தமிழகம் தவிர பிற மாநிலங்களில் தற்போது ஒவ்வொன்றாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து வருகிறது.

இந்நிலையில் நம் தமிழகத்தில் உள்ள மாணவர்களின் நிலைமை என்னாவது! அவர்கள் காத்திருக்கலாமா? அல்லது தேர்வு குறித்து ஏதேனும் தகவல் வெளிவருமா? என்று அவ்வப்போது கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அது குறித்து செய்தியாளர்களிடம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்தார். அதன்படி தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் குறித்து இரண்டு நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழக அரசும் கருத்து கேட்டு முடிவு எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் இடையே தமிழக அரசு கருத்து கேட்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

From around the web