கேமரா வேலை செய்யவில்லை! நாகை விசிக வேட்பாளர் புகார்!

நாகை விசிக வேட்பாளர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை என புகார்!
 
கேமரா வேலை செய்யவில்லை! நாகை விசிக வேட்பாளர் புகார்!

சட்டமன்ற தேர்தல் ஆனது முன்னதாக அறிவித்திருந்த ஏப்ரல் 6ம் தேதியில் தமிழக முழுவதும் நடைபெற்றது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் பலரும் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். மேலும் இந்த ஆண்டு அதிக வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. மேலும் சட்டமன்ற தேர்தலில் பல கூட்டணி கட்சிகள்  களமிறங்கி இருந்தன.

vck

குறிப்பாக தமிழகத்தில் மிகவும் வலிமையான எதிர்க் கட்சியான திமுக உடன் கூட்டணியாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்துள்ளன. மேலும் இவர்கள் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இருந்தது குறிப்பிடதக்கது. மேலும் திமுக சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகை தொகுதியின் வேட்பாளராக ஆளூர் ஷாநவாஸ் அறிவிக்கப்பட்டு இருந்தார். அவர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தார்.

தற்போது புகார் தெரிவித்துள்ளார் அதன்படி நாகையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி கேமராக்கள் செயல்படுத்தப்படவில்லை என அவர் புகார் தெரிவித்துள்ளார். மேலும் சிசிடிவி கேமரா வேலை செய்யாதது குறித்து அவர் புகார் அளித்துள்ளார். மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பகுதியில் இரண்டு சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை எனவும் அவர் புகார் அளித்துள்ளார். மேலும் நேற்று சிசிடிவி கேமராக்கள் சரி செய்யப்பட்ட நிலையில் இன்றும் மீண்டும் இயங்க வில்லை எனவும் ஆளூர் ஷாநவாஸ் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

From around the web