ஒட்டகப் பாலில் டீ: வடிவேலு பாணியில் தகராறு செய்த கும்பல் கைது

 

நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில் ஒட்டகப் பாலில் டீ போட்டு தருமாறு டீக்கடைக்காரரிடம் கூறி தகராறு செய்வார் என்பதும் அதனால் பிரச்சனை ஏற்படும் என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் உண்மையாகவே புதுவையில் டீ கடைக்காரர் ஒருவரிடம் ஒட்டகப் பாலில் டீ போட்டு தருமாறு தகராறு செய்த கும்பல் ஒன்றால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

புதுச்சேரி மாநிலத்திலுள்ள அரியாங்குப்பம் என்ற பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் டீ சாப்பிட ஒரு கும்பல் வந்தனர். அவர்கள் ஒட்டகப் பாலில் டீ போட்டுத் தரும் கடை உரிமையாளரிடம் ரகளை செய்தனர். ஒட்டகப்பால் இங்கு கிடையாது என்றும் ஆவின் பால் தான் உள்ளது என்றும் கடைக்காரர் கூறியதற்கு ஒட்டகப் பாலில் தான் டீ வேண்டும் என கடை உரிமையாளரிடம் அந்த கும்பல் ரகளை செய்தனர்

இது குறித்து காவல் நிலையத்தில் டீக்கடைக்காரர் புகார் செய்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஒட்டகப் பாலில் டீ போட்டு தருமாறு கடை உரிமையாளருடன் ரகளை செய்த கும்பலை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் 

From around the web