மும்பை மைதானத்தில் திடீரென குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கோஷம்: பெரும் பரபரப்பு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று மும்பையில் முதல் ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 255 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் தற்போது 256 என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் மும்பையில் இன்று வான்கடே ஸ்டேடியமே நிரம்பும் அளவிற்கு பார்வையாளர்கள் குவிந்துள்ளனர். இரு அணிகளையும் அவர்கள் உற்சாகப்படுத்தி கோஷம் எழுப்பி வருகின்ற
 
மும்பை மைதானத்தில் திடீரென குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கோஷம்: பெரும் பரபரப்பு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று மும்பையில் முதல் ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 255 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் தற்போது 256 என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மும்பையில் இன்று வான்கடே ஸ்டேடியமே நிரம்பும் அளவிற்கு பார்வையாளர்கள் குவிந்துள்ளனர். இரு அணிகளையும் அவர்கள் உற்சாகப்படுத்தி கோஷம் எழுப்பி வருகின்ற நிலையில் திடீரென பார்வையாளரின் ஒரு பகுதியிலிருந்து குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கோஷம் எழும்பியது. அதுமட்டுமின்றி நோ என்ஆர்சி நோ சிஏஏ என்ற பனியன்களை திடீரென அணிந்து கொண்டு இளைஞர்கள் சிலர் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு இழப்பு ஏற்பட்டது

இதனையடுத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி சமாதானப்படுத்தியதை அடுத்து தற்போது போட்டி மீண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த திடீர் கோஷத்தால் மைதானத்தில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web