ஆகஸ்ட் 1 முதல் பேருந்துகள் ஓடுமா? முதல்வர் ஆலோசனை!

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே தற்போது நடைபெற்றுவரும் ஆறாம் கட்ட ஊரடங்கு ஊரடங்கு முடிவடைய இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருப்பதால் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் ஆலோசனை செய்து வருகிறார் கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்துவது தொடர்பாக மருத்துவ குழு பரிந்துரையை வழங்கும் என்றும், கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும் மருத்துவக் குழுவிடம் முதலமைச்சர் கருத்து கேட்க உள்ளதாகவும் செய்திகள்
 

ஆகஸ்ட் 1 முதல் பேருந்துகள் ஓடுமா? முதல்வர் ஆலோசனை!

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே

தற்போது நடைபெற்றுவரும் ஆறாம் கட்ட ஊரடங்கு ஊரடங்கு முடிவடைய இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருப்பதால் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் ஆலோசனை செய்து வருகிறார்

கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்துவது தொடர்பாக மருத்துவ குழு பரிந்துரையை வழங்கும் என்றும், கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும் மருத்துவக் குழுவிடம் முதலமைச்சர் கருத்து கேட்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

மேலும் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பொதுபோக்குவரத்து தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே ஆகஸ்ட் 1முதல் பேருந்துகள் ஒரு சில நிபந்தனைகளையும் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தமிழகத்தில் பேருந்துகள் கடந்த சில மாதங்களாக ஓடாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்தில் உள்ள நிலையில் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

From around the web