ஆகஸ்ட் 1 முதல் சென்னையில் மட்டும் பேருந்துகள் ஓடாதா? அதிர்ச்சித் தகவல்

ஆகஸ்ட் 1 முதல் தமிழகம் முழுவதும் பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் ஆனால் சென்னையில் மட்டும் பேருந்துகளை இயக்கும் திட்டம் இல்லை என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஜூலை 31-ஆம் தேதி வரை ஆறாம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு முடிய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள் குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

ஆகஸ்ட் 1 முதல் சென்னையில் மட்டும் பேருந்துகள் ஓடாதா? அதிர்ச்சித் தகவல்

ஆகஸ்ட் 1 முதல் தமிழகம் முழுவதும் பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் ஆனால் சென்னையில் மட்டும் பேருந்துகளை இயக்கும் திட்டம் இல்லை என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஜூலை 31-ஆம் தேதி வரை ஆறாம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு முடிய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள் குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

குறிப்பாக தமிழகம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

இருப்பினும் சென்னை உள்பட ஒருசில பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருப்பதால் அந்த பகுதியில் மட்டும் பேருந்துகள் ஓடாது என்று கூறப்படுகிறது

இருப்பினும் இதுகுறித்த முறையான அறிவிப்பை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ குழுவினர்களுடன் கலந்து ஆலோசித்து அறிவிப்பை வெளியிடுவார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது

From around the web