கோயம்பேட்டில் பேருந்துகளும் குறைவு! பயணிகளும் குறைவு!நேரமும் மாற்றம்!

கோயம்பேட்டில் வெளிமாவட்டங்களுக்கு செல்லப்படும் பேருந்துகள் மிகக்குறைவாக இயங்க படுவதாகதகவல்!
 
கோயம்பேட்டில் பேருந்துகளும் குறைவு! பயணிகளும் குறைவு!நேரமும் மாற்றம்!

மக்கள் மத்தியில் தற்போது ஆட்கொல்லி நோயாக காணப்படும் கொரோனா பல்வேறு இன்னல்களை மக்களுக்கு கொடுத்துள்ளது. அதனால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில அரசுகளும் தங்களது மாநிலங்களில் பல்வேறு விதிமுறைகளையும் விதித்துள்ளனர். மேலும் ஒரு சில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் சில தினங்களுக்கு முன்பாக பல்வேறு கட்டுப்பாட்டு விதிகள் விதிக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில் தமிழகத்தின் சார்பில் இன்றைய தினம் இரவு முதல் இரவு நேர ஊரடங்கு நடைபெற உள்ளது.

bus

அதற்காக பல்வேறு மாவட்டங்களில் போக்குவரத்து துறை சார்பில் போக்குவரத்து பயண நேரமும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சென்னையில் மிகப்பெரிய பேருந்து நிலையம் காணப்படும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளின் வரத்து மிகவும் குறைவாக உள்ளதாக காணப்படுகிறது. மேலும் அந்த பேருந்து நிலையத்தில் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையும் மிக குறைவாக காணப்படுகிறது. இதனால் இதனால் இது மிகுந்த ஒரு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் சற்று முன் வரை கோயம்பேட்டில் இருந்து தொலைதூர மாவட்டங்களுக்கு 80 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.. மேலும் விழுப்புரம் மாவட்டத்திற்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 6 மணிக்கு பேருந்து சேவை நிறைவு பெறுகிறது. மேலும் திருச்சி மதுரை தஞ்சாவூர் சேலம் மாவட் டங்களுக்கு மதியம் ஒரு மணிக்கு பேருந்து சேவையை நிறைவு பெறுவதாகக் கூறப்படுகிறது. மேலும் கோவை ஈரோடு தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் காலை 8 மணிக்கு பேருந்து சேவை முடிவு வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தென் மாவட்டங்களான நெல்லை குமரி தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு காலை 8 மணியோடு பேருந்து சேவை முடித்து வைக்கப்பட்டதாக  சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தகவல் வெளியாகியுள்ளன. மேலும் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால் பேருந்துகள் அனைத்தும் பகலில் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. வெளியூருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே காணப்படுவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web