எரிந்த 108 !தீயை அணைத்த 102!! நம் கோவையில் பரபரப்பு;இதிலும் "செல்பி"!

கோவையில் கொரோனா நோயாளிகளை ஏற்றிச் சென்ற 108 ஆம்புலன்ஸ் திடீரென தீப்பற்றி எரிந்தல்!
 
108

தற்போது நம் நாடெங்கும் அனைத்து மக்கள் மத்தியில் பேசப்படும் வார்த்தையாக கொரோனா வளர்ந்துள்ளது. இந்த கொரோனா மனித உடலுக்குள் சென்று மனிதனின் நோயை உருவாக்கி இறுதியில் அவனை இழப்பிற்கு தள்ளுகிறது. இதனால் மத்திய அரசும் மாநில அரசும் மிகவும் போராடுகின்றனர் இந்த இக்கட்டான காலகட்டத்தில் அவர்களுக்கு உதவ ஆம்புலன்ஸ் வசதி கூட இல்லை என்றே கூறலாம். மேலும் பல மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகம் நிறைந்து காணப்படுகின்றனர்.108

மேலும் அவர்களை அழைத்துச் செல்வதற்கு போதிய ஆம்புலன்ஸ் வசதியும் இல்லாதது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த காலகட்டத்தில் கூட நம் அரசு மிகவும் திறம்பட பணியாற்றுகிறது என்றே கூறலாம். பல மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் வசதிக்காக பல வாடகை கார்களும் வாகனங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் தற்போது ஒரு ஆம்புலன்ஸ் ஒன்று அதுவும் 108 ஆம்புலன்ஸ் ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் அனைவரையும் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

இச்சம்பவம் கோவை மாநகரில் நடைபெற்றுள்ளது. அதன்படி கோவை மாநகரில் கொரோனா நோயாளியை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் ஆனது திடீரென்று தீப்பற்றி எரிந்தது. காரணம் என்னவென்றால் அந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் ஆனது திடீரென வெடித்ததால் ஆம்புலன்ஸ் மொத்தமாக தீப்பிடித்து எரிகிறது. இதனால் விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் அந்த தீயினை கட்டுப்படுத்துகின்றனர். இச்சம்பவம் இணையதளத்தில் வைரலாக பரவுகிறது.

From around the web