அசாமில் பற்றி எரிந்த எண்ணெய் வயல்… 1600 குடும்பங்கள் இடமாற்றம்!!

அசாமில் திடீரென எண்ணெய் வயல் தீப் பற்றி எரிய, அதனால் அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர், மேலும் இந்த சம்பவம் அங்கு சுற்றியுள்ள இடங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது அசாம் மாநிலத்தில் உள்ள ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் எண்ணெய் வயலில் 2 வார காலமாக எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது, இதனால் பலரும் இதுகுறித்து புகாரைத் தொடர்ந்து கொடுத்து வந்தனர்.

எண்ணெய் வயல் நிபுணர்கள் இதனை சரிசெய்ய எண்ணி, அதற்காக தீவிர ஆய்வில் ஈடுபட்ட நிலையில், எண்ணெய் வயலில் திடீரென தீப்பற்ற மொத்தமாக அந்த கிராமமே தீக்கிரையானது, தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடினர்.
இருப்பினும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, ஒருபுறம் அங்கிருந்த 1600 குடும்பங்கள் குடியுருப்புகளை காலி செய்து, அருகில் உள்ள ஊரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஓஎன்ஜிசி தீயணைப்பு வீரர்கள் எவ்வளவு போராடியும், தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலையில் வெளியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.
குடியிருப்புகள், வயல்வெளிகள் என மக்கள் பெரிய அளவில் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளதால் கடும் சோகத்தில் உள்ளனர்.