பம்பர் டூ பம்பர் காப்பீடு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

 
insurance

புதிய வாகனங்களுக்கு பம்பர் டு பம்பர் காப்பீடு திட்டம் கட்டாயம் என ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் தற்போது இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

புதிய வாகனங்களுக்கு பம்பர் டூ பம்பர் என்ற ஐந்து ஆண்டுகள் காப்பீடு திட்டம் அவசியம் என்று ஈரோடு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவு காரணமாக புதிய வாகனம் வாங்குபவர்களுக்கு அதிக செலவாகும் என்று கூறப்பட்டது. குறிப்பாக நான்கு சக்கர வாகனம் வாங்குபவர்கள் இரண்டு லட்ச ரூபாய் அதிகமாக செலவாகும் என்றும் கூறப்பட்டது 

இந்த நிலையில் இதனை எதிர்த்து நியூ இந்தியா இன்சுரன்ஸ் என்ற நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் பம்பர் டூ பம்பர் காப்பீடு திட்டத்தை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

From around the web