"பம்பர் டூ பம்பர் கட்டாய காப்பீட்டு"-வாபஸ்பெற்றார் நீதிபதி !!

பம்பர் டூ பம்பர் காப்பீட்டு உத்தரவைத் திரும்பப் பெற்றது உயர்நீதிமன்றம்
 
bumper to bumper

தற்போது தமிழகத்தில் முதன்மை நீதிமன்றம் உயர் நீதிமன்றம் உள்ளது. மேலும் உயர் நீதிமன்றம் அவ்வப்போது பல்வேறு உத்தரவுகளை கூறிக்கொண்டே வரும். மேலும் பல்வேறு அறிவுறுத்தல்களையும் கூறிக்கொண்டே வரும்.அதன் வரிசையில் முன்னதாக பம்பர் டு பம்பர் என்ற காப்பீட்டு திட்டத்தை அறிவித்துள்ளது. அதனை தற்போது அந்த உத்தரவை திரும்பப் பெறுவதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி பம்பர் டு பம்பர் என்ற காப்பீட்டு திட்ட அடிப்படையில் ஐந்து ஆண்டுகளுக்கு வாகன காப்பீடு செய்ய உத்தரவிட்டார் நீதிபதி.judge

மேலும் செப்டம்பர் 1 க்கு பிறகு விற்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் காப்பீட்டு கட்டாயம் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் வாகன உரிமையாளர், ஓட்டுநர், பயணி உள்ளிட்ட அனைவரையும் உள்ளடக்கியது இந்த பம்பர் டூ பம்பர் காப்பீட்டு திட்டம் என்றும் கூறியுள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த  மூன்று மாதம்  அவகாசம் கேட்டுள்ளது பொது காப்பீட்டு கவுன்சில்.

காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது பொது காப்பீட்டு கவுன்சில். உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து பம்பர் டூ பம்பர் காப்பீட்டு தொடர்பாக சுற்றறிக்கை வெளியிட்டது போக்குவரத்துத்துறை. உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்காக தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தார் நீதிபதி வைத்தியநாதன், உடனடியாக செயல்படுத்தும் சூழல் இல்லாததால் உத்தரவை திரும்பப் பெறுவதாக நீதிபதி அறிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு போக்குவரத்து துறை வெளியிட்ட சுற்றறிக்கை களையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.

From around the web