2019- 2020 பட்ஜெட்: ஜூலை 5 ஆம் தேதி தாக்கல்…

அதிக இடங்களை வென்று மீண்டும் பலமாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ள மோடி தலைமையிலான பாஜக அரசு வரும் ஜூலை 5 ஆம் தேதி 2019-20 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது. புதிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் பதவியேற்றது முதல் 2019 பிப்ரவரி வரை பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த
 
2019- 2020 பட்ஜெட்: ஜூலை 5 ஆம் தேதி தாக்கல்…

அதிக இடங்களை வென்று மீண்டும் பலமாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ள மோடி தலைமையிலான பாஜக அரசு வரும் ஜூலை 5 ஆம் தேதி 2019-20 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது. புதிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் பதவியேற்றது முதல் 2019 பிப்ரவரி வரை பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தது.

கடந்த பிப்ரவரி மாதம் இந்த 2019 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சராக பொறுப்பு வகித்த பியூஷ் கோயல் தாக்கல் செய்தார்.

கடந்த 5ஆண்டு காலமாக நிதியமைச்சராக அருண்ஜெட்லி பதவி வகித்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லாத காலங்களில் பியூஷ் கோயல் நிதியமைச்சராக பொறுப்பு வகித்த்துடன், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நிதித்துறை செயலகத்தில் பட்ஜெட் தயாரிப்பு தொடர்பான ஆலோசனைக்கூட்டங்கள் சிறப்பாக நடந்து முடிந்து, பட்ஜெட் சிறப்பாக தயாராகிவிட்டது.

2019- 2020 பட்ஜெட்: ஜூலை 5 ஆம் தேதி தாக்கல்…

கடந்த 2014ஆம் ஆண்டு முதன்முறையாக ஆட்சியில் அமர்ந்த பாஜக அரசு ஜூலை 10ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்தது. இம்முறையும் ஜூலை 10ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு 5 நாட்கள் முன்னதாக ஜூலை 5 ஆம் தேதியே தாக்கல் செய்யப்படவுள்ளது.தொடர்ச்சியாக இரண்டாவது முறை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பாஜக அரசு அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான திட்டங்கள் வெளியிடும் என்று விவசாயிகள், ஏழைகள், இளைஞர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

 இடைக்கால பட்ஜெட் சிறப்பாகவே இருந்தது, அதனுடன் கூடுதலாக இன்னும் சில திட்டங்கள் செயல்படுத்தினால் போதும் என்கின்றனர் மக்கள்.

From around the web