பட்ஜெட் 2021-22: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபர் வருமானவரி உச்சவரம்பு குறித்த தகவல்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட்டை வாசிக்க தொடங்கிய நிலையில் சற்றுமுன் பட்ஜெட் வாசிப்பை நிறைவு செய்தார். இதில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே நாம் பார்த்தோம்
இந்த நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. இந்த நிலையில் சற்று முன் வந்த அறிவிப்பின்படி தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இதன்படி கடந்த ஆண்டு அறிவித்த 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த தேவை இல்லை என்ற நிலை தொடர்கிறது. மேலும் 7.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 25 ஆயிரமும், 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் ரூ.37,500 12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் ரூ.50 ஆயிரமும் 15 லட்சம் வரை வருமானவரி உள்ளவர்கள் 62 ஆயிரத்து 500 ரூபாயும் வருமான வரி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது