பிரிட்டன், நியூசிலாந்து, தொடர்ந்து துபாயும் இந்தியாவுடன் ரத்து!

துபாய்- இந்தியா இடையேயான ஏப்ரல் 25ஆம் தேதி முதல் அடுத்த பத்து நாட்களுக்கு உள்ள விமான சேவை ரத்து  செய்தது துபாய்!
 
பிரிட்டன், நியூசிலாந்து, தொடர்ந்து துபாயும் இந்தியாவுடன் ரத்து!

 உலகமே தற்போது கண்ணுக்கு தெரியாத வைரஸ் ஆன கொரோனா போரிட்டு வருகிறது.மேலும் இந்தியாவில் இந்நோயானது கடந்த ஆண்டில் கட்டுப்படுத்தப்பட்டது. எனினும் தற்போது இந்நோயின் தாக்கம் ஆனது மீண்டும் எழுந்துள்ளது மக்களை அதிர்ச்சியை அளித்துள்ளது. மேலும் குறிப்பாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் தேதியில் மாதத்திலிருந்து இந்நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது ஆச்சரியத்தை உண்டாக்கியது. காரணம் என்னவெனில் கடந்த ஆண்டு இந்தியாவின் பெரும் முயற்சியான ஊரடங்கு மூலம் இந்நோயானது கட்டுப்பாட்டிற்கு வந்தது.

airplane

மேலும் இந்தியா பல நாடுகளுக்கு முன்னோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.  இந்தியாவில் மீண்டும் இந்நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. மேலும் இந்தியாவில் பல மாநிலங்களில் இந்நோயின் தாக்கம் ஆனது முன்பை விட வீரியம் உள்ளதாக காணப்படுகிறது. மேலும் இந்திய அரசின் சார்பில் பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. இத்தகைய சூழலில் இந்தியாவுடன் ஒரு சில நாடுகள் விமான போக்குவரத்து சேவையை ரத்து செய்தன. அதன்படி சில தினங்களுக்கு முன்பாக நியூசிலாந்து அரசு இந்தியாவுடன் உள்ள விமானப் போக்குவரத்து சேவையை சில காலங்களுக்கு ரத்து செய்துள்ளது.

மேலும் நேற்றைய தினம் பிரிட்டன் அரசானது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இந்தியாவுடன் உள்ள விமான போக்குவரத்து சேவையை ரத்து செய்திருந்தது. தற்போது துபாய்,இந்தியாவில் உள்ள விமான சேவை ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியா-துபாய் இடையேயான ஏப்ரல் 25ஆம் தேதி முதல் அடுத்த பத்து நாட்களுக்கு உள்ள விமான சேவை ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் கொரோனா  பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் விமான சேவையை ரத்து செய்தது துபாய் அரசு

From around the web