அம்பத்தூரில் லஞ்சம்! பட்டா வழங்க லஞ்சம் கேட்ட வட்டாட்சியர்கள் கைது!

சென்னை அம்பத்தூரில் பட்டா வழங்க லஞ்சம் கேட்ட வட்டாட்சியர் பார்வதி உதவியாளர் முருகன் கைது செய்யப்பட்டனர்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிய நிலையில் அதற்காக தமிழகத்தில் முன்னேற்பாடுகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் சில பகுதிகளில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. மேலும் எல்லாவற்றிற்காகவும் லஞ்சம் என்ற பெயர் தமிழகத்தில் ஆங்காங்கே ஒலித்துக் கொண்டே உள்ளது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் அவனது ஜாதிச்சான்று, குடும்ப அட்டை போன்ற சேவைகளை வழங்குவதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டியது  உள்ளதால் மிகவும் வேதனை அளிப்பதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

kaithu

தற்போது சென்னை அம்பத்தூரில் பட்டா வழங்க லஞ்சம் கேட்டதாக தகவல்.மேலும் சென்னை அம்பத்தூரில் பட்டா வழங்க 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வட்டாட்சியர் பார்வதி மற்றும் உதவியாளர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கேப்ரியல் என்பவருக்கு பட்டம் வழங்க லஞ்சம் பெற்ற வட்டாட்சியர் மற்றும் அவரது உதவியாளர் போலீசாரிடம் வசமாக சிக்கினார்.

இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெற்று வருவதால் தமிழக மக்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். மேலும் இதுபோன்ற சம்பவங்களை போலீசார் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சரியாக கவனித்து அவர்களை கைது செய்து தண்டனையும் வழங்குகின்றனர்.

From around the web