பிரேக்கிங் நியூஸ்: இனி தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர்!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் முடிவில் மருந்து தனியார் மருத்துவமனையில் ரெம்டெசிவிர் விற்பனை செய்ய முடிவு!
 
பிரேக்கிங் நியூஸ்: இனி தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர்!

தமிழகத்தில் தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. மேலும் இந்த ஆட்சியில் முன்னாள் முதல்வரின் மகன் திமுக கட்சியின் தலைவருமான மு க ஸ்டாலின் முதல்வராக உள்ளார். மேலும் அவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு இருந்த ஒவ்வொரு வாக்குறுதிகளையும் தற்போது வரிசையாக நிறைவேற்றி வைக்கிறார். அவர் தலைமையில் ஆட்சி மக்களுக்கு பல்வேறு நிவாரண நிதி சலுகைகளையும் வழங்கி வருகிறார்.remdesivir

மேலும் அவருக்கு உதவியாக மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நிகழ்த்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டிருந்தனர். மேலும் இந்த ஆலோசனை முடிவில் தற்போது சில அதிரடி தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும்  ரெம்டெசிவிர் மருந்தினை விற்பனை செய்ய அரசு முடிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் மட்டுமே நேரடியாக நோயாளிகளின் குடும்பத்தினரிடம் இந்த ரெம்டெசிவிர் மருந்தினை வழங்கப்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது.மேலும் இவை நாளை முதல் அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web