பிரேக்கிங் நியூஸ்: பிரதமர் மோடி இரவு 08 :45 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை!

இன்று இரவு 8 45 மணிக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்!
 
பிரேக்கிங் நியூஸ்: பிரதமர் மோடி இரவு 08 :45 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை!

இந்தியாவில் சில தினங்களாக கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த கொரோனா இந்தியாவில் கடந்த ஆண்டு இறுதியில் கட்டுப்படுத்தப்பட்டது. ஆயினும் தற்போது இந்தியாவில் இந்த கொரோனா நோயானது இரண்டாவது அலையாக எழுந்துள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது. குறிப்பாக இந்தியாவின் மகாராஷ்டிரம் தமிழகம் போன்ற மாநிலங்களில் இன்னும் தாக்கமானது மிகவும் அதிகரித்துள்ளது. இதற்காக மத்திய அரசின் சார்பில் பல்வேறு தடுப்பூசிகளும் பல மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகிறது.

modi

ஆயினும் ஒருசில மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா  தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா  நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது டெல்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை அதிகரித்துள்ளது தெரிய வந்தது. இது போன்று ஒரு சில மாநிலங்களிலும் இந்த மாதிரி ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. தற்போது இந்தியாவில் பாரத பிரதமராக உள்ளார் நரேந்திர மோடி.

அவர் கடந்த ஆண்டில் கொரோனா போது நாட்டு மக்களுக்கு சில அறிவுறுத்தல்களையும் சில கட்டுப்பாடுகளையும் விதித்து இருந்தார். மேலும் அவர் உரை நிகழ்த்துகிறார் என்றாலே நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு என்ற நிலையில் மக்கள் மனதில் இருந்தது. தற்போது அவர் மீண்டும் இந்த ஆண்டு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக கூறப்பட்டது .அதன்படி அவர் இன்று இரவு 8:45 மணிக்கு நாட்டுமக்களுக்கு உரையாற்ற உள்ளார். மேலும் கொரோனா  சூழல் தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். மேலும் கொரோனா  பல தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி அடுத்தடுத்து ஆலோசனை மேற்கொண்ட நிலையில் தற்போது இத்தகைய முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

From around the web