டெல்லியில் எல்லைகள் மூடல்: போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்த திட்டமா?

 

டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வரும் நிலையில் டெல்லியில் திடீரென எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் பயன் இன்றி போனது

இந்த நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட பேரணியில் வன்முறை நிகழ்ந்ததால் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று திடீரென டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை காவல்துறையினர் உதவியுடன் அப்புறப்படுத்த முயன்றதாக தகவல்கள் வெளியானது 

farmers

சற்று முன் வெளியான தகவலின்படி டெல்லி எல்லைகள் மூடப்பட்டுள்ளதாக விவசாயிகளின் போராட்டம் காரணமாக என்று எல்லைகள் மூடப்பட்டுள்ளதாக வருகிறது. குறிப்பாக  காசிப்பூர், சிங்கு, ஆச்சந்தி, மங்கேஷ், சபோலி, பியாவ், மன்யாரி எல்லைகள் மூடல் என தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டத்தை அரசு முடிவுக்கு கொண்டு வரவே அவர்களை அப்புறப்படுத்தி வருவதாகவும், இதனை அடுத்து சுப்ரீம் கோர்ட்டில் இன்று அவசர மனு விவசாயிகள் சார்பில் தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்த மனு இன்று விசாரணைக்கு வரலாம் என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web