இன்னைக்கு முன்பதிவு; திங்கட்கிழமையன்று தடுப்பூசி போடப்படும்!

கேரளாவில் இன்றைய தினம் முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போடுதல் காண முன்பதிவு தொடங்கியுள்ளது!
 
இன்னைக்கு முன்பதிவு; திங்கட்கிழமையன்று தடுப்பூசி போடப்படும்!

அப்போது நாடெங்கும் கொரோனாவின் காற்று வேகமாக வீசுகிறது. இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்துடன் இந்த கொரோனா எதிராக போராடுகின்றனர். மேலும் பல மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிசன் பற்றாக்குறையும் அதிகம் நிலவுகிறது , ஒரு சில இடங்களில் இந்தக் கொரோனாவின் தடுப்பூசிகளின் விலையானது விண்ணளவு உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர குடும்பத்தினர் மற்றும் ஏழை மக்கள் இந்த தடுப்பூசியை பெறுவதற்கும் சிகிச்சை அளிப்பதற்கும் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.pinaraiyi

இந்நிலையில் ஒரு சில பகுதிகளில் இந்த தடுப்பூசி பற்றாக்குறையும் நிலவுகிறது. இதைதொடர்ந்து மத்திய அரசின் சார்பில் இரண்டு விதமான தடுப்பூசிகள் நாட்டிலுள்ள பல மாநிலங்களிலும் அனுப்பி வைக்கப்படுகிறது. அவை தற்போது வரை 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பல மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட உள்ளதாக தகவல் வெளியானது. இத்தகவல் நமது அண்டை மாநிலமான கேரளாவில் வெளியாகி உள்ளது.

கேரளாவில் சரித்திர சாதனையாக தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சியைப் பிடித்து முதல்வராக உள்ளார் பினராய் விஜயன். அவர் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா  தடுப்பூசி குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி கேரளாவில் வருகின்ற திங்கட்கிழமை முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா  தடுப்பூசி செலுத்தப்படும் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இத்தகைய தகவலை கூறியுள்ளார். மேலும் இந்த தடுப்பூசி காண முன் பதிவானது இன்று முதல் பதிவு செய்யலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

From around the web