விமான நிலையத்தில் வெடி விபத்து: பெங்களூர் அருகே பயங்கரம்!

 
blast

பெங்களூர் விமான நிலையம் அருகே நடந்த வெடி விபத்தில் 6 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

பெங்களூரு விமான நிலைய அருகே உள்ள பிளாஸ்டிக் ஆலையில் பலர் பணிபுரிந்து வருகின்றனர். எனினும் ஊரடங்கு நேரம் என்பதால் தற்போது ஒரு சிலர் மட்டுமே இதில் பணிபுரிந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிளாஸ்டிக் ஆலையில் உள்ள இயந்திரம் ஒன்றில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.இதில் 6 பேர் காயமடைந்ததாகவும் உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன

பிளாஸ்டிக் ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து குறித்த தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தன.ர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் இந்த விபத்து காரணமாக விமான நிலையம் வரை பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் கட்ட விசாரணையில் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வெடிவிபத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது

From around the web