"கட்சிக்குள்ளே கலவரம்"-கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் குண்டுவீச்சு!

பாஜக வேட்பாளர் தணிகைவேல் மீது பாஜக நிர்வாகி ஆனந்தன் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்!
 
"கட்சிக்குள்ளே கலவரம்"-கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் குண்டுவீச்சு!

மத்தியில் ஆளும் பாஜக கட்சியானது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் கூட்டணியுடன் களம் இறங்கி இருந்தது.மேலும் அவை தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுக கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அதிமுக தரப்பிலிருந்து பாஜகவிற்கு 20 சட்டமன்றத் தொகுதிகளும், 1 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. தற்போது சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்தது.சட்டமன்றத் தேர்தலின்போது ஒரு சில பகுதிகளில் அசம்பாவிதங்கள் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.bomb

இந்நிலையில் தற்போது கட்சிக்குள்ளேயே கலவரம் உருவாகியுள்ளது கட்சி உறுப்பினர்களிடையே பரபரப்பு உருவாகியுள்ளது. அதன்படி பாஜக வேட்பாளர் பாஜக நிர்வாகி மீது குண்டு வீசிய சம்பவம் மிகுந்த பரபரப்பை உருவாக்கி உள்ளது. இச்சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதன்படி திருவண்ணாமலை பாஜக நிர்வாகி ஆனந்தன் வீட்டில் குண்டு வீசிய வழக்கில் பாஜக வேட்பாளர் தணிகைவேல் மீது வழக்கு பதிவு செய்தது.

மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து தலைமறைவாகியுள்ளார் பாஜக வேட்பாளர் தணிகைவேல். மேலும் தலைமறைவான அவரை போலீசார் வலைவீசி தேடுகின்றனர். மேலும்  தேர்தலுக்காக 28 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு திருப்பி தரவில்லை என்றும் நிர்வாகி ஆனந்தன் புகார் அளித்துள்ளார். மேலும் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் தனது ஆதரவாளர்களை வைத்துக்கொண்டு குண்டு வீசியதாக ஆனந்தன் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் குண்டு வீசிய பாஜகவினர் அசிங்கமாக திட்டி கத்தியால் குத்தி ,குடும்பத்தை எரித்து விடுவோம் என மிரட்டியதாக பாஜக நிர்வாகி ஆனந்தன் புகார் அளித்துள்ளார்.

From around the web