யாரையும் நம்பாதீங்க: தூக்கில் தொங்கும் முன் கடிதம் எழுதி வைத்த பிரபல நடிகை

பிரபல நடிகை ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதி வைத்த கடிதத்தில் யாரையும் நம்பாதீர்கள் என எழுதி வைத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மும்பையைச் சேர்ந்த போஜ்புரி நடிகை அனுபமா பதாக் ஆவார். இவர் ஆகஸ்ட் 2ஆம் தேதி தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் தற்கொலைக்கு முந்தைய நாள் அவர் பேஸ்புக் தளத்தில் நேரடியாக ரசிகர்களிடம் பேசினார். அப்போது தான் ஏமாற்றப்பட்டதாகவும் தன்னால் யாரையும் நம்ப முடியவில்லை என்றும்
 

யாரையும் நம்பாதீங்க: தூக்கில் தொங்கும் முன் கடிதம் எழுதி வைத்த பிரபல நடிகை
Bhojpuri actress Anupama Pathak commits suicide in Mumbai

பிரபல நடிகை ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதி வைத்த கடிதத்தில் யாரையும் நம்பாதீர்கள் என எழுதி வைத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மும்பையைச் சேர்ந்த போஜ்புரி நடிகை அனுபமா பதாக் ஆவார். இவர் ஆகஸ்ட் 2ஆம் தேதி தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்

தற்கொலைக்கு முந்தைய நாள் அவர் பேஸ்புக் தளத்தில் நேரடியாக ரசிகர்களிடம் பேசினார். அப்போது தான் ஏமாற்றப்பட்டதாகவும் தன்னால் யாரையும் நம்ப முடியவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். இதன் பின் மறுநாள் அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்

அவரது தற்கொலை குறித்த செய்தியை அறிந்து விரைந்து சென்ற போலீசார் அவர் எழுதி வைத்த கடிதம் ஒன்றை கண்டுபிடித்தனர். அந்த கடிதத்தில் தயவுசெய்து யாரையும் நம்ப வேண்டாம், நான் ஒரு சிலரை நம்பியதால் தான் வாழ்க்கையில் இந்த நிலைக்கு வந்துள்ளேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

மேலும் அந்த கடிதத்தில் தான் முதலீடு செய்த நிறுவனம் ஒன்று முதிர்வு பெற்ற பிறகும் பணத்தை திரும்ப தரவில்லை என்றும் தன்னுடைய நண்பர் ஒருவர் கடந்த மே மாதம் ஊரடங்கு நேரத்தில் தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்றதாகவும் அவர் இதுவரை அந்த வாகனத்தை திருப்பி தரவில்லை என்றும் எழுதியிருந்தார். இந்த கடிதம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்

From around the web