நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து; 6 பேர் பலி

நெய்வேலி என்எல்சி இரண்டாவது மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த விபத்தில் 11 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் விபத்தில் சிக்கிய 2 பேரை தேடும் பணியில் தீவிரமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 17 பேரை மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது கடந்த ஏப்ரல் 8ம்தேதி நெய்வேலி என்எல்சி அனல்மின் நிலையத்தில்
 
நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து; 6 பேர் பலி

நெய்வேலி என்எல்சி இரண்டாவது மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த விபத்தில் 11 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் விபத்தில் சிக்கிய 2 பேரை தேடும் பணியில் தீவிரமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 17 பேரை மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த ஏப்ரல் 8ம்தேதி நெய்வேலி என்எல்சி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து 5 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது இரண்டு மாத இடைவெளியில் மீண்டும் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் என்எல்சி பாய்லர் விபத்தில் 6 பேர் பலியானது குறித்து அமைச்சர் உள் துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்

விபத்து குறித்து முதலமைச்சருடன் அமிர்ஷா தொலைபேசியில் பேசியதாகவும் என்எல்சி விபத்தில் மீட்பு பணிகளுக்கு மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்ய தயார் என்று அமித்ஷா கூறியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

From around the web