டெல்லி சுடுகாட்டில் 24 மணி நேரமும் எரிந்து கொண்டிருக்கும் பிணங்கள்: அதிர்ச்சி தகவல்

 
டெல்லி சுடுகாட்டில் 24 மணி நேரமும் எரிந்து கொண்டிருக்கும் பிணங்கள்: அதிர்ச்சி தகவல்

டெல்லியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மட்டுமின்றி கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் டெல்லி சுடுகாட்டில் பிணங்களை 24 மணி நேரமும் எரிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 

மேலும் பிணங்களை எரிப்பதற்கு சுடுகாட்டில் நீண்ட வரிசையில் உறவினர்கள்  காத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன .இதனை அடுத்து டெல்லியில் உள்ள முக்கிய பூங்கா ஒன்றை சுடு காடாக மாற்றி அங்கு பிணங்களை எரிக்க மாநில நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது

delhi

டெல்லியில் தினமும் சராசரியாக 350க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் மரணம் அடைந்து வருவதாகவும் இதனை அடுத்து சுடுகாடுகளில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக பூங்காக்கள் மைதானங்கள் சுடுகாடாக ஆக மாறும் அவல நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அம்மாநில ஊடகங்கள் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை எரிக்க டோக்கன் பெற்று உறவினர்கள் காத்திருக்கும் அவல நிலையும் அங்கு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

From around the web