இந்தக் கோடையிலும் வெளுத்து வாங்கிய மழை! கன்னியாகுமரி முதலிடம்;

கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரியை சேர்ந்த குழித்துறை பகுதியில் 11 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது!
 
இந்தக் கோடையிலும் வெளுத்து வாங்கிய மழை! கன்னியாகுமரி முதலிடம்;

தற்போது கோடைகாலம் நிலவுகிறது. இதன் மத்தியில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதன் மத்தியிலும் கூட தமிழகத்தில் பல பகுதிகளில் கோடை மழை வெளுத்து வாங்கியது. இதனால் மழை பெய்ய பகுதியில் வாழும் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் ஒட்டுமொத்தமாக கடந்த 24 மணி நேரத்தில் அதிக மழைப்பொழிவு கொண்ட மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் திகழ்கிறது.rain

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பொலிவான 11 சென்டிமீட்டர் பதிவாகி உள்ளது. அதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பேச்சிப்பாறை பகுதியில் 9 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் சித்தார்த், தக்கலை பகுதிகளில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நாகர்கோவில் பகுதிகளில் ஏழு செண்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதை தொடர்ந்து முதுகுளத்தூர், மயிலாடி போன்ற பகுதிகளில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

நடுவட்டம், விளாத்திகுளம் தொகுதியில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனால் பெரும்பாலான மழைப்பொழிவு கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழ்ந்ததால் கன்னியாகுமரி மாவட்டமே தற்போது மழை பொழிவு கொண்ட மாவட்டத்தில் முதல் இடத்தில் உள்ளது. மேலும் அரபிக் கடலில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் யாரும் கடலில் சென்று மீன் பிடிக்க வேண்டாம் என்றும் தற்போது வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு எச்சரித்துள்ளது.

From around the web