அதிமுக தலைமை மீது குற்றசாட்டு! அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி!

அதிமுக தலைமையில் குளறுபடி நடக்கிறது என்று கூறுகிறார் அறந்தாங்கி மண்டை ரத்தின சபாபதி!
 

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக கட்சி தன்னுடன் கூட்டணியாக பாமக ,பாஜக போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது. இந்நிலையில் அதிமுக கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வேட்பாளரை அறிவித்தது.

eps

அதன்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவார் எனவும் அறிவித்திருந்தது. மேலும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் போடி தொகுதியில் போட்டியிடுவார் எனவும் அறிவித்திருந்தது. இந்நிலையில் அறந்தாங்கி தொகுதியில் தற்போது எம்எல்ஏவாக இருப்பவர் ரத்தினசபாபதி. தற்போது அவருக்கு சீட் வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

 அவர் புதுக்கோட்டை தொகுதியில் அதிமுக  தோல்வி அடைந்தால் அதற்கு முழு காரணம் அமைச்சர் விஜயபாஸ்கர் தான் எனவும் கூறினார். மேலும் புதுக்கோட்டையில் 6 தொகுதிகளிலும் அதிமுக தோல்வியை தழுவும் எனவும் அவர் கூறினார். மேலும் அவர் அதிமுக  தலைமையில் குளறுபடி நடப்பதாக கூறுகிறார். மேலும் அவர் வருகின்ற 19ஆம் தேதி தனது சீட்டு வழங்க வேண்டும் எனவும் கெடு விடுத்துள்ளார்.

From around the web