20 நோயாளிகளில் 5 நோயாளிகளின் பார்வையை பறித்த கருப்பு பூஞ்சை!

புதுச்சேரியில் கருப்பு பூஞ்சை நோயால் 5 பேருக்கு பார்வை பறிபோனது தகவல்!
 
blackfuncus

தற்போது நாடெங்கும் மக்கள் மத்தியில் பேசப்படும் ஒரு நோய் என்றால் கொரோனா என்ற வைரஸ் தான். கடந்த ஆண்டு இந்தியாவில் இந்த நோய் கட்டுபட்டு நிலையில் இந்த ஆண்டு எதிர்பாராதவிதமாக மீண்டும் அதிகரித்துவரும் மட்டுமின்றி அதிக வீரியத்துடன் அனைவருக்கும் வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் தற்போது ஒரு சில மாநிலங்களில் இந்த நோயின் தாக்கம் ஆனது குறை ஏற்பட்டுள்ளது. காரணம் என்னவெனில் அந்த மாநிலங்களில் முழு ஊரடங்கு கடுமையாக அமல்படுத்த பட்டதால் அங்கு கொரோனா பாதிப்பு குறைந்தது.black fungus

அதே சமயத்தில் நம் தமிழகத்திலும் தென் மாநிலங்களிலும் ஊரடங்கு அமல் படுத்தப் பட்டாலும் இந்த பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது மேலும். இந்த கொரோனா பாதிப்போடு மட்டுமின்றி தற்போது புதிதாக கருப்பு பூஞ்சை என்ற நோயும் உருவாகியுள்ளது. அவை பெரும்பாலும் கொரோனாநோயாளிகளை மிகவும் பாதிப்பிற்குள்ளாக்குகிறது என்றும் கூறப்படுகிறது. மேலும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் இந்த பாதிப்பானது அதிகரித்துள்ளது.

மேலும் புதுச்சேரியில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த கருப்பு பூஞ்சை நோயால் 20 நோயாளிகள் பாதிக்கப்பட்டதாக கூறுகிறது. மேலும் அவர்களில் 5 பேருக்கு தற்போது இந்த நோயினால் பார்வை பறிபோனது. மேலும் அந்த மருத்துவமனை தரப்பில் இருந்து அவர்கள் சிகிச்சைக்கு வரும் போதே பார்வை இழந்து வந்ததாகவும் அவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

From around the web