கருப்பு பூஞ்சை அறிவிக்கப்பட வேண்டிய நோய்! பயம் மற்றும் பதற்றம் வேண்டாம்!!

கருப்பு பூஞ்சை நோயானது தற்போது அறிவிக்கப்பட வேண்டிய நோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது!
 
blackfuncus

தற்போது மக்கள் அனைவரும் தனது வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் சோகத்தில் உள்ளனர். மேலும் பல மாநிலங்களில் ஊரடங்கும் அவர்களது வாழ்க்கையை சிறையில் தள்ளுகிறது. இத்தகைய கட்டுப்பாடுகள் ஏனென்றால் கடந்த ஆண்டு இந்தியாவில் பரவத் தொடங்கி கடந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனாநோயானது மீண்டும் பரவ தொடங்கியதால் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த நோயானது தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.radha krishnan

மேலும் பல மாநிலங்களில் இந்த ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க பல அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மேலும் தனியார் மருத்துவமனைகளும் இதனை இலாபகரமாக எண்ணி விலைவாசி அதிகரிக்கின்றனர். கொரோனா தாக்கத்தில் மக்கள் பாதித்துள்ள நிலையில் மேலும் ஒரு புதிய நோய் உருவாகியுள்ளது. அதன்படி கருப்பு பூஞ்சை போன்ற நோயானது தற்போது தமிழகம் முழுவதும் வேகமாக பரவியது.  இந்த நிலையில் கருப்பு பூஞ்சை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவித்துள்ளது தமிழக அரசு.

மேலும் தனியார் மருத்துவமனைகளில் இந்த கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டால் அதனை உடனடியாக அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. மேலும் இந்த கருப்பு பூஞ்சை நோய்  குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். அந்த படி இந்த நோய்க்கு யாரும் பயப்பட வேண்டாம் என்றும் கூறியுள்ளார் நம் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.

மேலும் தமிழகத்தில்  இதுவரை 9 பேருக்கு கருப்பு பூஞ்சை  நோய் கண்டறியப்பட்டு ள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும் கருப்பு பூஞ்சை பாதிப்பால் ஏற்பட்ட ஒன்பது பேரில் இரண்டு பேர் குணமடைந்து வீடு திரும்பினார் என்றும் ஏழு பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் கருப்பு பூஞ்சை பற்றி ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

From around the web